தனியார் பள்ளிக்கு நிகரான அரசு தொடக்கப்பள்ளி பெற்றோர்கள் பெருமிதம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தனது தரமான கல்வி மற்றும் மாணவர்களின் அனைத்துத் திறன்களையும் மேம்படுத்தும் முயற்சிகள் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 1962-ல் தொடங்கப்பட்ட இப்பள்ளி, கடந்த 5 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் சி. வீரமணி அவர்களின் தலைமையின் கீழ் புதிய உயரங்களை நோக்கி பயணித்து வருகிறது.
அவர், கல்வித்துறை, உள்ளாட்சித்துறை, உள்ளூர் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பள்ளியின் உட்கட்டமைப்பு, மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் கூடுதல் திறன்களை மேம்படுத்தும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். கல்வி வள்ளல் காமராஜர் அரங்கம் கம்பீரமான கர்ம வீரரின் உருவப்படம் பள்ளிக்குள் நுழையும் அனைவரையும் வரவேற்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி, பிளாஸ்டிக் இல்லாத பள்ளியாக செயல்படுகிறது.
மாணவர்களின் கற்றல் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணமயமான வகுப்பறைகள் மற்றும் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், தனி நூலகம் மற்றும் கணினி வகுப்பறைமாணவர்களின் அறிவை விரிவுபடுத்தும் வசதிகள். அன்பாசிரியர் விருது மாநில எழுத்தறிவு விருது சிறந்த பள்ளி மேலாண்மைக் குழு விருது மாவட்ட அளவில் சிறந்த தொடக்கப் பள்ளிக்கான கல்வி வள்ளல் காமராசர் விருது, கிரீன் சாம்பியன் எனும் பசுமை முதன்மையாளர் விருது மாநில நல்லாசிரியர் விருது கணினி பயிற்சி, அபாகஸ் பயிற்சி, சிலம்பம் பயிற்சி, சதுரங்கப் போட்டி, இசை நடனப் பயிற்சி, கையெழுத்துப் பயிற்சி, ஸ்போக்கன் இங்லீஷ் பயிற்சி, தலைமைத்துவம் பயிற்சி, கோடைகாலப் பயிற்சி, விளையாட்டு போட்டிகளுக்கான பல்வேறு பயிற்சிகள் என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தலைமை ஆசிரியர் சி. வீரமணி அவர்களின் முயற்சியால், கடந்த 5 ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கை 28-லிருந்து 63-ஆக உயர்ந்துள்ளது. பல விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பாக ஆகஸ்ட் 15.8.2024 அன்று கிரீன் சாம்பியன் விருதுநை தலைமை ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சராய் அவர்கள் கரங்களால் வழங்கப்பட்டது.
கெரிகேப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி, தனது தரமான கல்வி மற்றும் மாணவர்களின் அனைத்துத் திறன்களையும் மேம்படுத்தும் முயற்சிகள் மூலம் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. இப்பள்ளியின் வெற்றி, அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஒரு சான்றாகும்.
No comments