தமிழ் புலிகள் கட்சியின் தலைவரை கொலை செய்ய கூட்டு சதி; நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்.
தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவனை கொலை செய்ய வேண்டும் என்ற whatsapp உரையாடல் கூட்டு சதியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கட்சி தலைவருக்கு 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய காவல் துறை பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்சியை நிர்வாகிகள் மனு.
ஈரோடு மாவட்ட தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமையில் அக்கட்சியின் மாநில தலைவர் நாகை திருவள்ளுவனை கொலை செய்ய வேண்டும் என்று வாட்ஸ் அப் உரையாடல் வந்த நிலையில் இந்த கூட்டு சதியில் உள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனு அளித்தனர்.
அந்த மனுவில் தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் தமிழக மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக சமூக நீதி சார்ந்து தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் போராடி வருகிறார், இதில் அரசியல் ரீதியாக மதம் மற்றும் இனம் ரீதியாக எதிர்ப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
கட்சியின் தலைவரை கொல்ல சதி திட்டம் தீட்டியது வாட்ஸ் அப்பில் அம்பலம் ஆகி உள்ளது,இந்த வாட்ஸ் அப் உரையாடலில் அரசியல் கட்சியின் தலைவரின் பெயர் குறித்து சொல்லப்பட்டு,கொலை சதி திட்டம் தீட்டப்பட்டு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
எனவே தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவனை கொலை செய்ய வேண்டும் என்ற ரகசிய வாட்ஸ் அப் உரையாடல் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்சித் தலைவருக்கு 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்து தமிழ் புலி கட்சி சார்பில் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
No comments