மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவன தலைவர் அருணன் கண்டணம்.
ஒன்றிய அரசு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் ஒதுக்கீடு செய்த சுமார் 2000 கோடியை விடுவிக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கிறது அதாவது ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழி கொள்கையான புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டிலும் கொண்டு வர வேண்டும் அப்படிக் கொண்டு வந்தால் மட்டுமே நிதியை விடுவிக்க இயலும் என்று தெரிவித்திருக்கிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாக தான் 12 ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு ஆசிரியர்கள் என 15 ஆயிரம் ஆசிரியர்களின் ஊதியம் வகுப்பறை கட்டடங்கள் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், ஆசிரியர்களுக்கான அனைத்துவகை பயிற்சிகள் மேற்கொள்ள இந்த நிதியை தான் பயன்படுத்துகின்றனர் ஆனால் ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கையான புதிய கல்விக் கொள்கையை தமிழ் நாட்டில் அமல்படுத்தினால் மட்டுமே விடுவிக்க இயலும் என தெரிவித்து உள்ளது.
இது எதனால் என்றால் இந்தியையும் சமஸ்கிருத மொழியையும் தமிழ்நாட்டில் கொண்டுவந்து தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் மாணவர்கள் நலனில் தாய் தந்தைக்கு நிகராக காலை உணவு திட்டம், மேற்படிப்பில் சாதித்து பல துறைகளில் வேலையாப்பு பெற நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு, தமிழ் புதல்வன் திட்டம் என பல திட்டங்களை கொண்டுவந்து இந்தியாவின் முதன்மை முதலமைச்சர் என்பதை பறைச்சாற்றுகின்ற முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் வடிவமைத்து செயல்படுத்தி வுரும் திட்டங்களை தடுத்து நிறுத்தி ஒன்றிய அரசு நிதி விடுக்காமல் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித் தரத்தை சீரழிக்கவே நிதி விடுவிக்க மறுக்கிறது.
மேலும் இதே நிலையை தொடர்ந்து ஒன்றிய அரசு மேற்கொண்டுவருவதை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் கொண்டுவருவதை கைவிட்டு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் ஒதுக்கிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறேன், அப்படி விடுவிக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் மக்களை திரட்டி மிக பெரிய போட்டத்தை மேற்கொள்ள தயங்கமாட்டோம் என தெரிவித்துக் கொள்கிறேன், என இவ்வாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
No comments