புதுச்சேரி மாநில ஆதி திராவிடர் நலத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இருவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா.
புதுச்சேரி மாநில ஆதி திராவிடர் நலத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இருவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா துறை இயக்குநர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் உள்ள ஊழியர்கள் ஓய்வு பெறும் போது அவர்களுக்கு நலத்துறை இயக்குனர் இளங்கோவன் கவுரப்படுத்தி வழியனுப்பது வழக்கம்.
அதன்படி ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் முதுநிலை கணக்கு அதிகாரியாக பணியாற்றிய ஸ்ரீதரன், பல்நோக்கு ஊழியாராக பணியாற்றிய பக்தவச்சலம் ஆகியோர் நேற்று பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நலத்துறை அலுவலகத்தில் நடந்தது.
விழாவில், ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் ஓய்வு பெற்ற இருவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர்கள் பழனி, லபாஸ் வேல்முருகன், கதிரவன், தேவி, நல ஆய்வாள அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments