பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திடீர் ஆய்வு.
வேலூர் மாவட்டம் 28.8.2024 இன்று அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் பள்ளிகொண்டா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின் போது புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்களிடம் சிகிச்சை முறை மற்றும் அடிப்படை வசதிகளை குறித்து கேட்டறிந்தார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆய்வகம் மற்றும் மருந்தகத்தில் உள்ள மருந்துகளின் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார் தொடர்ந்து அரசு யுனானி மருத்துவ சிகிச்சை பிரிவை பார்வையிட்டு ஆய்வு செய்து மருத்துவரிடம் பொது மக்களுக்கு எந்த வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
மேலும் மருத்துவர் வாத நோய், மூல நோய், ஆஸ்துமா, தோல் நோய், பக்கவாதம், சர்க்கரை ரத்த அழுத்த நோய்கள் மாதவிடாய் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவித்தார், இந்த ஆய்வின் போது அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா, அரசு மருத்துவர்கள் ஷாலினி, சௌமியா, சித்தார்த் மற்றும் பலர் உடன் இருந்தனர்..
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments