ஜோலார்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்னங்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 12 மணியளவில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு 2333 பயனளிகளுக்கு ரூ 35.97 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கி சிறப்பித்தார்கள்.
உடன் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க. தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் மாவட்ட ஊராட்சிகள் தலைவர் என். கே.ஆர் சூரியகுமார் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மாவட்ட திட்ட முகமை இயக்குனர் உமா மகேஸ்வரி மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் அரசு துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments