மயிலாடுதுறையில் CNG தட்டுப்பாடு; பங்க் முற்றுகை.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆட்டோ ரிஷாக்களுக்கு பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயுவுக்கு (CNG) கடும் தட்டுப்பாடு, எரிவாயு நிரப்பும் பெட்ரோல் பங்கை நூற்றுக்கணக்கான ஆட்டோக்களுடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆட்டோக்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு (CNG) நிரப்பும் நிலையம் குத்தாலம் அருகே சேத்திர பாலபுரம், சோழசக்கரநல்லூர் ஆகிய இரண்டு இடங்களில் அமைந்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகள் படி பெரும்பாலான ஆட்டோ ரிஷாக்கள் CNG எனப்படும் இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படுகின்றன. மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இவ்வாறு இயங்கி வருகின்றன.
இவற்றிற்கு இயற்கை எரிவாயு நிரப்புவதற்கு மயிலாடுதுறை பகுதியில் இரண்டு இடங்களில் மட்டுமே இயற்கை எரிவாயு நிரப்பும் நிலையங்கள் உள்ளன. இன்று சோழசக்கரநல்லூர் பகுதியில் இயற்கை எரிவாயு தீர்ந்து போனதால், ஆட்டோக்களுக்கு எரிவாயு இல்லாமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் இயற்கை எரிவாயு நிரப்பும் பங்கில் ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிவாயு நிரப்பிச் சென்றனர்.
வாரத்திற்கு மூன்று நாட்கள் இதுபோல் தட்டுப்பாடு ஏற்படுவதால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோக்களுடன் எரிவாய் நிரப்பும் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டனர். காவல்துறையினர் அங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சீராக சப்ளை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேஸ் தட்டுப்பாடு நிலவும் நிலையில் வரைமுறை இன்றி கேஸ் ஆட்டோ களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அனுமதி வழங்கி வருவதாகவும் ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
No comments