கடலூர் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி மற்றும் பெல்ட் வழங்கும் விழா.
கடலூர் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி மற்றும் பெல்ட் சான்றிதழ் வழங்கும் விழா பெறாக் ஒகேனவா கோஜி ரியோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் சேத்தியாதோப்பு பூதங்குடி எஸ்.டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பள்ளியின் இயக்குனர் டாக்டர்.தீபா சுஜின் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர். பி சத்யராஜ் முன்னிலை வகித்தார். கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் சென்சாய் .வி ரங்கநாதன் அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் தாளாளர் சாமுவேல் சுஜின் அரிமா சங்கம் மாவட்டத் தலைவர் மணிமாறன் அரிமச்சங்க தலைவர் சௌந்தர்ராஜன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.
இப்போட்டியில் சிதம்பரம் ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில் புவனகிரி வடலூர் பரங்கிப்பேட்டை பண்ருட்டி விருத்தாச்சலம் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் பங்கு பெற்றனர். இப்போட்டியில் கட்டா மற்றும் சாய் பிரிவில் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு. பரிசு கோப்பைகளும் பெல்ட் தகுதி தேர்வில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு கலர் பெல்ட்டுகளும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் கராத்தே பயிற்சியாளர் எம். இளவரசன் ஆர். ஷர்மா ஆர் ரவிக்குமார் டி. பிரத்தியுனன் எ சத்தியமூர்த்தி ஆர் கிஷோர் சுபாஷினி ராஜ்கிரன் தென்னரசன் நந்தினி ஆகியோர் பங்கு பெற்றனர். விழா முடிவில் ஆர் ஷர்மா நன்றி கூறினார்
No comments