Breaking News

புதுவையில் 168 பி.பார்ம் சீட்டுகள் சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளது.


அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் இந்தாண்டு மொத்தம் 168 பி.பார்ம் சீட்டுகள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளது.


அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் இந்தாண்டு நிரப்பப்பட உள்ள பி.பார்ம் இடங்கள் பற்றிய விபரங்களை சென்டாக் வெளியிட்டுள்ளது. அரசு கல்லுாரியை பொருத்தவரை மதர்தெரசா கல்லூரியில் மொத்தம் 59  இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இவை, புதுச்சேரி மாணவர்களுக்கு 36, காரைக்கால்-9, ஏனாம்-1, மாகி-1 இடங்கள் என பிராந்திய ரீதியாக நிரப்பப்படும்.இதுதவிர புதுச்சேரிக்கான சுயநிதி இடங்கள்-3, பிற மாநில மாணவர்களுக்கான சுய நிதி இடங்கள்-7 என்.ஆர்.ஐ.,-1 என்று நிரப்பப்பட உள்ளது.


தனியார் கல்லுாரிகளை பொருத்தவரை மணக்குளவிநாயகர்-30, வெங்கடேஸ்வரா -50, ராக்- 30 மொத்தம் 110 பி.பார்ம் சீட்டுகள் உள்ளன. இந்த 110 இடங்களும் பொது-55, ஓ.பி.சி.,-12, எம்.பி.சி.,-20, எஸ்.சி.,-18, மீனவர்-2, முஸ்லீம்-2, பி.டி.,-1 என்ற இட ஒதுக்கீட்ட அடிப்படையில் நிரப்பப்படும். உள் ஒதுக்கீடாக விடுதலை போராட்ட வீரர்-4, மாற்றுத்திறனாளி-6, முன்னாள் ராணுவ வீரர்-3, விளையாட்டு வீரர்-1 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளது.


மதர் தெரசா கல்லுாரியில் ஒரு இடம் என்.ஆர்.ஐ., ஒதுக்கப்பட்டுள்ளதால் அந்த ஒரு இடத்தினை தவிர்த்து மீதமுள்ள 58 சீட்டுகளும், தனியார் கல்லுாரிகளில் 110 என மொத்தம் 168 பி.பார்ம் இடங்கள் இந்தாண்டு சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளது.


- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி

No comments

Copying is disabled on this page!