நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் துவக்க நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி வழங்கப்பட உள்ளது என தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் துவக்க நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடைபெற்றது இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் தொடங்கி வைத்த போது இதனை தெரிவித்தார் தொடர்ந்து திருச்செந்தூரில் இருந்து மதுரைக்கு புதிய பேருந்து சேவையையும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் நெடுந்தூரம் சென்று கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளதை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழக முழுவதும் கிராம மக்கள் உள்ள கால்நடை வளர்க்கக்கூடிய விவசாய மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி ஏற்படுத்தினார் மேலும் முதல் கட்டமாக 200 நடமாடும் கால்நடை மருத்துவ உறுதியையும் தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சாத்தான்குளம் ஸ்ரீவைகுண்டம் புதுக்கோட்டை ஒட்டப்பிடாரம் விளாத்திகுளம் ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கால்நடை மருத்துவ சேவை பெறும் வகையில் ஆறு நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய நடமாடும் கால்நடை மருத்துவ சேவை உறுதியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் இதை தொடர்ந்து அந்தந்த பகுதிகளுக்கு நடமாடும் கால்நடை மருத்துவ பகுதிக்கு சென்றது.
இதைத் தொடர்ந்து திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரைக்கு இரண்டு புதிய பேருந்து சேவை துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியிலும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக முழுவதும் 200 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி வழங்கப்பட்டுள்ளது மேலும் இன்னும் 40 ஊர்திகள் வர உள்ளது இதன் மூலம் கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய கால்நடை வளர்க்கக்கூடிய விவசாயிகள் மிகவும் பயன்பெறுவார்கள் எனவும் தமிழகம் முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி வழங்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர்கள் சிவ ஆனந்தி, முத்து முகமது திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாரன் தூத்துக்குடி மண்டல போக்குவரத்து துறை பொது மேலாளர் பாலசுப்ரமணியன் நகராட்சி துணைத் தலைவர் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
No comments