வாணியம்பாடி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலம் மீது விபத்து ஒருவர் உயிரிழப்பு 7 பேர் படுகாயம்.
கர்நாடகா மாநிலத்திலிருந்து ஆரணி பகுதியில் உள்ள பச்சையம்மன் குலதெய்வ கோயிலுக்காக சைலோ காரில் காமாட்சி அம்மாள் (வயது 74) குடும்பத்தினர் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது சிவா என்பவர் காரை ஓட்டி சென்று உள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, அடுத்த செட்டிப்பனூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் மீது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த காமாட்சி அம்மாள் (வயது 74) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் இதில் பயணம் செய்த பெங்களூர் பகுதி சேர்ந்த சிவசங்கரி (வயது 49), குமரேசன் (வயது 49), பிரணவ் (வயது 18), சுஜை கிரண் (வயது 14), மற்றும் சூளகிரி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 68), குன்னியம்மாள் (வயது 52), ஓட்டுநர் சிவா (வயது 35) உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர், அவ்வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
பலத்த காயமடைந்த ஓட்டுனர் சிவா மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாணியம்பாடியில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் மீது குலதெய்வ கோயிலுக்கு சென்ற கார் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments