தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் பேராயர் ராபர்ட் கால்டுவெல் 133வது நினைவு தினத்தையொட்டி சிறப்பு கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாநகரில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 55 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் 3வது பிரிவுவில் கால்டுவெல் பள்ளி மாணவர் தேவகிருபை முதலிடமும், எக்ஸன் பள்ளி மாணவர் இன்பெண்ட் இரண்டாம் இடமும் பிடித்தனர். 2வது பிரிவில் ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவி ரக்ஷிதா முதலிடமும், அலாய்சியஸ் பள்ளி மாணவி கௌசல்யா இரண்டாம் இடமும் பிடித்தனர். 1வது பிரிவில் சிவந்தி ஆதித்தனார் பள்ளி மாணவி சிந்துஜா முதலிடமும், சாமுவேல்புரம் மாநகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் தருண் இரண்டாம் இடமும் பிடித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பள்ளி தாளாளர் ஸ்டேன்லி வேதமாணிக்கம் தலைமை வகித்தார். பள்ளியின் முன்னாள் மாணவரும் நட்டாத்தி ஊராட்சி மன்றத் தலைவருமான பண்டாரம், கால்டுவெல் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க பொறுப்பாளர்கள் முத்து மாணிக்கம், மனோகர், வழக்கறிஞர் கிறிஸ்டோபர் விஜயராஜ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கான்ஸ்டன்டைன் நன்றி கூறினார்.
No comments