புசிஹண்ட் கிளப் சார்பில் தொழில் முனைவோர்களை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சியை திரைப்பட இயக்குனர் பாக்கியராஜ் துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில் இயங்கி வரும் புசிஹண்ட் கிளப் சார்பில் தொழில் முனைவோர்களை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சி ஹோட்டல் ரெசிடென்சி டவரில் நடைபெற்றது.
புசிஹண்ட் கிளப்பின் இயக்குனர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நிறுவன தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புசிஹண்ட் கிளப் உறுப்பினர்கள் மற்றும் வாஸ்கோ நிறுவன அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments