Breaking News

மலட்டாற்றில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை, முதல்வர் ரங்கசாமி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


புதுச்சேரி - கடலுார் சாலை ரெட்டிச்சாவடி மலட்டாற்றில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை, முதல்வர் ரங்கசாமி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


புதுச்சேரி பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை கோட்டம் சார்பில், ரெட்டிச்சாவடி மலட்டாற்றில் 5 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக மேம்பாலம் அமைக்கும் பணியை, கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


தற்போது, பாலத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், திறப்பு விழா நேற்று நடந்தது.இதில், முதல்வர் ரங்கசாமி ரிப்பன் வெட்டி பாலத்தை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு அர்பணித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ,, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில், பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், தேசிய நெடுஞ்சாலை பிரிவு செயற் பொறியாளர் பாலசுப்ரமணியன், உதவி பொறியாளர் ஜெயராஜ், இளநிலை பொறியாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி

No comments

Copying is disabled on this page!