புவனகிரியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை மண்டல பயிலரங்கம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் புவனகிரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்கான மண்டல பயிலரங்கம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது புவனகிரி கிழக்கு ஒன்றிய தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிலரங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பட்டியல் அணி துணைத் தலைவர் கே வி எம் எஸ் சரவணகுமார் பங்கேற்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து வழிகாட்டுதல்கள் ஆலோசனை வழங்கி உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
இதில் ஒன்றிய துணைத் தலைவர் லட்சுமி நரசிம்மன் ஒன்றிய பொருளாளர் மதிவாணன் பழனிச்சாமி பாலசுப்பிரமணியன் ஜோதி வெங்கடேசன் சக்திவேல் குமரேசன் சாந்தலட்சுமி உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்
No comments