உளுந்தூர்பேட்டை பெஸ்கி பள்ளியில் ஆண்டு விழா.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பக்ருதீன் தலைமையில் ஆண்டு விழா நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியை செல்வராணி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். விழாவில் உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் கடந்த கல்வியாண்டில் 10,11,12, ஆகிய வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகளையும் ரொக்க தொகையும் வழங்கி பாராட்டி பேசினார்.
நடைபெற்ற விழாவில் நகர மன்ற தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசு நகர மன்ற துணைத் தலைவர் வைத்தியநாதன் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயசங்கர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் நகர மன்ற உறுப்பினருமான டேனியல்ராஜ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் ஜெயந்தி மதியழகன், ராமலிங்கம், செல்வகுமாரி ரமேஷ்பாபு மனோபாலன் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments