பிச்சிவிலை புதூர் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் மஹாகும்பாபிஷேக கொடை விழா.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள பிச்சிவிலை பத்திரகாளி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் காலை 6:00 மணிக்கு மங்கள இசை, நான்காம் காலயாக சாலை பூஜை, ஹோமம், ஸ்பருஷாஹீதி, நாடிசந்தானம், நாமகரணம், ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹீதி, தீபாராதனை, யாத்ராதானம் நடைபெற்றது.
அதன் பின்னர் காலை 8 மணி அளவில் கடம் புறப்பட்டு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் விமான கலசத்திற்கும் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹோகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீபாரதியும் பிரசாதமும் வழங்கப்பட்டது.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
No comments