20 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லாமல் பரிதவித்து வருகிறோம் - கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதி விஸ்வநாததாஸ் நகர். இந்தப் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் போதிய சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு மற்றும் வாறுகால் வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும், போதிய சாலை வசதி இல்லை என்பதால் இறந்தவர்களை கையில் சுமந்து கொண்டு தான் சொல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும், மழைக்காலத்தில் அப்பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி விடுவதால் மிகுந்த சிரமம் அடைந்து வருவதாகவும், இதுகுறித்து பலமுறை மனு அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தங்கள் பகுதிக்கு போதிய அடிப்படை வசதி செய்து தரக் கூறி அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கை மனுவியும் வழங்கினர்.
No comments