கிருஷ்ணகிரி பாஜக அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பயிலரங்கம் கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி பாஜக அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் மாவட்ட பயிலரங்கம் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது:
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய, மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் குந்தாரப்பள்ளி பாஜக அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் மாவட்ட பயிலரங்கம் மாவட்டத் தலைவர் கே. எஸ். ஜி. சிவப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் ராஜ்குமார் கலந்துகொண்டு பயிற்சி வழங்கினார்.
இதில் மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் கவியரசு, கவுன்சிலர் சங்கர், செந்தில், ஆடிட்டர் மாதப்பன், ஜெயராமன், ராஜேஸ்வரி மற்றும் மாநில, மாவட்ட, நிர்வாகிகள், அணி பிரிவு நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் பயிலரங்கத்தில் கலந்து கொண்டனர்.
No comments