எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் துவக்கிவைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் சர்வதேச இளைஞர் விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி, ஆட்டோ ஸ்டிக்கரிங் , மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு நடன கலைக்குழு ஆகிய நிகழ்ச்சிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இவ் விழிப்புணர்வு பேரணியில் RKS கலை & அறிவியல் கல்லூரி, AKT இன்ஜினியரிங் & பாலிடெக்னிக் , கல்லூரி, இம்மகுலேட் கலைக்கலூரி,முருகா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சந்தோஷம்மாள் செவிலியர் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சார்ந்த 850 மாணவ மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள், இந்நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அகிலன் மாவட்ட திட்ட மேலாளர் திருமதி கவிதா திருமலை அவர்கள் வரவேற்புரை ஏற்றார். இதில் மருத்துவ அலுவலர்கள் பழமலை, விஜயகுமார் மற்றும் சாமுண்டீஸ்வரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் நிகழ்ச்சியின் முடிவாக கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நடன கலைக்குழு மூலம் ஒயிலாட்டம் நடனமாடி நிறைவு பெற்றது
No comments