சின்னமனூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் உண்ணாவிரத போராட்டம்.
தேனி மாவட்டம் சின்னமனூர் ரவுண்டானா பகுதியில் (நான்கு) ஆட்டோ சங்க நிர்வாகிகள் சார்பில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது, இதில் தமிழக அரசு இலவச பேருந்து விட்ட நிலையில் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது அதனை தொடர்ந்து வெளியூர்களில் இருந்து ஷேர் ஆட்டோவில் பத்துக்கு மேற்பட்ட நபர்களை ஏற்றிக்கொண்டும் சின்னமனூர் வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து பயணிகளை ஏற்றி செல்வதால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது, அது மட்டுமில்லாமல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் மற்ற வாகனங்களை தவிர காவல்துறை மற்றும் ஆர் டி ஓ எங்களது ஆட்டோ சங்க நிர்வாகிகளின் வாகனங்களின் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
இது குறித்த காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை என்பதனை வலியுறுத்தி இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.
- உத்தமபாளையம் தாலுகா செய்தியாளர் P.பாண்டி.
No comments