அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் கருப்பு கொடி காட்டுவோம் என எச்சரித்து திருப்புவனம் பகுதியில் அதிமுகவினரின் சுவரொட்டியால் பரபரப்பு.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் அதிமுக பற்றியோ, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் பற்றியோ, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பற்றியோ தவறாக பேசினால் அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம் என எச்சரித்து அதிமுகவினர் சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பாஜக கூட்டணி முறிந்ததில் இருந்து தலைவர்கள் ஒருவர் மற்றொருவரை விமர்சிப்பது தொடர்கதை ஆகி உள்ளது. இந்நிலையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக கட்சியினையும், எடப்பாடியார் மற்றும் பிற தலைவர்களை விமர்சித்து வருகிறார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தலைவர்கள் பேசி வந்த நிலையில், சிவகங்கை மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் மணிமாறன், அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம் என சுவரொட்டி ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைவர்களைத் தொடர்ந்து தொண்டர்களும் ஒருவரை ஒருவர் விமர்சிப்பது எங்கு கொண்டு போய் முடியப்போகிறதோ என அரசியல் ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
No comments