நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை வாகனம் ஸ்டார்ட் ஆகாததால் பொது மக்கள் வாகனத்தை தள்ளி ஸ்டார்ட் செய்த அவலம்.
சிவகங்கையில் அமைச்சர் துவக்கி வைத்த நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை வாகனம் ஸ்டார்ட் ஆகாததால் பொது மக்கள் வாகனத்தை தள்ளி ஸ்டார்ட் செய்த அவலம்.
சிவகங்கையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் துவக்கி வைத்து சென்ற சிறிது நேரத்திலேயே வாகனம் ஸ்டார்ட் ஆகாமல் அதனை பொது மக்கள் தள்ளி சென்று ஸ்டார்ட் செய்த அவலம் அரங்கேறியுள்ளது.
கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஆபத்தில் இருக்கும் கால்நடைகளுக்கு மருத்துவ உதவி அளிக்க ஆம்புலன்ஸ் வாகன சேவை புதிதாக துவங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் 6 ஆம்புலண்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்ட நிலையில் அதன் சேவையை சிவகங்கையில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்டத்தை சேர்ந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் ஆட்சியர் ஆஷா அஜித் ஆகியோர் துவங்கிவைத்தனர்.
அதனை தொடர்ந்து நிகழ்ச்சி முடிவடைந்து அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்ற நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்களை அங்கிருந்த ஓட்டுநர்கள் ஸ்டார்ட் செய்து அவர்களுக்கான இருப்பிடம் நோக்கி கொண்டு சென்றனர். இதில் ஒரு வாகனம் மட்டும் ஸ்டார்ட் ஆக மறுக்கவே அந்த வாகனத்தின் ஓட்டுநர் அப்பகுதியில் இருந்த பொது மக்களை அழைத்து தள்ள செய்து பின்னர் ஸ்டார்ட் செய்து எடுத்து சென்றார்.
அமைச்சர் துவக்கி வைத்த புதிய வாகனம் ஸ்டார்ட் ஆகாமல் அங்கேயே நின்றதும் பின்னர் பொது மக்கள் தள்ளி வாகனத்தை ஸ்டார்ட் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments