புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி சம்மேலன கௌரவத் தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் தலைவர் ராஜலட்சுமி, செயலாளர் தமிழரசி, பொருளாளர் செல்வராணி, அமைப்பு செயலாளர் சத்தியா, லலிதா செய்தி தொடர்பாளர் கலைமாமணி டாக்டர் நமச்சிவாயம் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறுகையில், முக்கிய கோரிக்கைகளான மாத இறுதி நாளில் ஊதியம் வழங்க வேண்டும் என்றும், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள போனஸ் மற்றும் பஞ்சப்படி போன்றவற்றை காலத்தோடு வழங்க வேண்டும் என்றும், மூன்றாண்டுகள் பணி முடித்த ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்துவரும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்ககைகளை புதுச்சேரி அரசு விரைவில் தீர்க்க வலியுறுத்தாக கூறினார்கள்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments