மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் மூன்று குற்றவியல் நடைமுறை திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு புதிதாக நடைமுறைப்படுத்தியுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று நீதிமன்றம் புறக்கணிப்பு செய்து போராட்டம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பேரில் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து நீதிமன்றத்தை புறக்கணித்து நீதிமன்ற வாயிலில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள் வேலு குபேந்திரன், கலைஞர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.
No comments