தென்காசியில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம்.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் அரசு போக்கு வரத்து தொழிலாளர்களை நேரடியாக நியமனம் செய்யாமல் தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை பணியமர்த்தி போக்கு வரத்து கழகங்களை முடக்குவதாக கூறி துண்டு பிரசுரங்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் திமுக அரசை கண்டித்து சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் பணியார்களுக்கும் பொதுமக்களுக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
No comments