களையார்கோவிலில் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்த அதிமுகவினர்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து மரியாதைக்குறைவாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலயை கண்டித்து சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அதிமுக சார்பில் சார்பில் அக்காட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டீபன் அருள் தலைமையில் சொக்கநாதபுரம் கடை வீதியில் ஒன்று கூடிய கட்சி நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பி அண்ணாமலையின் உருவ பொம்மையை கட்டையால் அடித்தும் காலால் மிதித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தி உருவ பொம்மையை எரித்தனர்.
அதன் பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் அண்ணாமலையின் உருவ பொம்மை தண்ணீர் ஊற்றி அனைத்தனர். இப்போராட்டத்தில் ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் SPL. சரவணன் முன்னாள் ஒன்றிய செயலாளர் சண்முகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். 25 க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்பை தெரிவித்தனர்.
No comments