ஜோலார்பேட்டையில் ஆஇஅதிமுக 11 ஆயிரம் மேற்பட்ட புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி இடையம் பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று பிற்பகல் 12 மணியளவில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா அதிமுக நகர செயலாளர் சீனிவாச தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்து கொண்டு உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கி சிறப்பித்தார்கள்.
உடன் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் ஜோலார்பேட்டை நகர பொறுப்பாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் கிளைக் கழக செயலாளர் கழகப் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் மற்றும் பலர் உள்ளனர்.
No comments