மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கையொப்பம் உள்ள அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு பகுதியிலும் அதிமுக நிர்வாகிகள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது அதன் ஒரு பகுதியாக தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் காட்டுச்சேரி ஊராட்சியில் அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் கலந்துகொண்டு அதிமுக நிர்வாகிகள் தொண்டர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி புதிய உறுப்பினர் அட்டை வழங்கினார் நிகழ்ச்சியில் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
No comments