Breaking News

புதுச்சேரியில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இறுதிப்பட்டியலை சென்டாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


சென்டாக்கில் நீட் மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான வரைவு தரவரிசைப்பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் கடந்த 20ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


அதன்படி விண்ணப்பததாரர்கள் ஆட்சேபனைகள் கேட்கப்பட்டு கடந்த 23ஆம் தேதி திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. நேற்று இறுதி தரவரிசை பட்டியல் மற்றும் வரைவு சீட் இடஒதுக்கீடு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் இன்று இரவு 9 மணிக்குள் தெரிவிக்க வேண்டும்.


இடம் கிடைத்தவர்கள் 2ஆம் தேதி அசல் சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட கல்லுாரியில் சேர்ந்து கொள்ள வேண்டும் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.


- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி

No comments

Copying is disabled on this page!