மயிலாடுதுறை ஆர்எம்எஸ் தபால் நிலையத்தை மீட்டெடுக்க எம்பி சுதா துரித நடவடிக்கை!
மயிலாடுதுறை ஆர்எம்எஸ் தபால் நிலையத்தை மீட்டெடுக்க எம்பி சுதா துரித நடவடிக்கை! திருச்சியில் ரயில்வே துறை உயர் அதிகாரிகளுடன் சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் நேரில் பேச்சுவார்த்தை.
பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர். R. சுதா திருச்சி ரயில்வே கோட்ட பொது மேலாளர் DRM அவர்களிடம், மயிலாடுதுறை ஆர் எம் எஸ் தபால் நிலையத்திற்கு இடம் ஒதுக்குவது குறித்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்று தொலைபேசியில் பேசியதுடன், சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் அவர்களையும் தொழிற்சங்க நிர்வாகிகளையும் உடனடியாக திருச்சிக்குச் சென்று ரயில்வே துறை உயர் அதிகாரிகளை சந்திக்க அறிவுறுத்தினார்.
அதனை அடுத்து திருச்சி கோட்ட வணிக மேலாளர் மோகனப்பிரியா மற்றும், திருச்சி கோட்ட ஒருங்கிணைந்த பொறியாளர் நந்திலாலிடமும் நேரில் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நூறு ஆண்டுகளாக இயங்கி வரும் ஆர் எம் எஸ் தபால் நிலைய இட பிரச்சினை குறித்து திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்திற்கு நேரில் சென்று எடுத்து கூறி சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் கோரிக்கையை முன் வைத்தார்.
ரயில்வேதுறை அதிகாரிகளும் மயிலாடுதுறையில் ஆர் எம் எஸ் இயங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதமும் உறுதியும் அளித்துள்ளார்கள்.
No comments