ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகiனம் விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம் 2 பேர் பலத்த காயம் உயிரிழப்பு இல்லை.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டப்பள்ளி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்ற வருகிறது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் அந்த வழியாக வாகனங்கள் ஊர்ந்து சென்று கொண்டுள்ளது. பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி ஒரு லாரி வேகமாக சென்று சாலையில் ஊர்ந்து சென்ற வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளது. லாரி வேகமாக வந்து மோதியதில் அந்த வழியில் இருந்த கார், லாரி, அரசு பேருந்து அனைத்தும் நொறுங்கி விபத்துக்குள்ளாகிறது. இந்த விபத்தில் எட்டு கார், ஒரு அரசு பேருந்து, நான்கு லாரிகள் என அடுத்தடுத்து ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஒசூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் , இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்பு எதுவும் இல்லை விபத்து குறித்து அட்கோ போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து தடைப்பட்டு உள்ளது போலீசார் போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.
No comments