மணலூர்பேட்டை அருகே டாட்டா ஏசி வாகனம் மோதி பெண் பலி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே உள்ள குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மனைவி சுமதி வயது45. இவர் நேற்று காலை தனது வீட்டில் இருந்து தண்ணீர் எடுக்க சாலையின் இடது புறமாக நடந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் திருவண்ணாமலை இருந்து திருக்கோவிலூர் நோக்கி சென்ற MAHINDRA PICKUP வாகனத்தின் ஓட்டுனர் பெங்களூரைச் சேர்ந்த மாதுராம் என்பவர் தூக்கத்தில் சாலையின் இடதுபுறம் இருந்த விளம்பர பலகையின் மீது மோதி சுமதி மீது அதிவேகமாக மோதி சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு இழுத்து சென்று வாகனத்தின் அடியில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
மேற்படி சம்பவம் குறித்து மணலூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமால் அவர்கள் விபத்து குறித்து விசாரணை செய்து வருகிறார். இறந்த நபரின் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப் பட்டது.
No comments