வேலூர் அடுத்த K. V. குப்பம் கிராமத்தில் தலித் சமூகத்தினர் மற்றும் மாற்று சமூகத்தினர் இடையே மோதல்.
வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் தாலுகாவில் உள்ள கேம்மாங்குப்பம் கிராமத்தில் காளியம்மன் கோவில் சுமார் 300 ஆண்டுகளாக தலித் சமூகத்தினர் தன் குல தெய்வமாக வணங்கி வந்தனர் அந்த கோவிலில் மாற்று சமூகத்தினர் லோகநாதன் என்பவர் அந்தக் கோவிலுக்குள் அமர்ந்து அருள் வாக்கு கூறியும் வெளியூர் சென்று நிதி வசூல் செய்தும் அந்தக் கோயிலை தன் வசப்படுத்தி உள்ளார்.
தற்போது கோவில் திருவிழா நடைபெறுவதற்கு மாற்று சமூகத்தினர் மட்டுமே அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது இதனால் பூர்வ குடி ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சென்று பூசாரி லோகநாதனிடம் முறையிட்டனர் அதற்கு லோகநாதன் அம்மனிடம் உத்தரவு பெற்று கூறுவதாக கோவில் கருவறைக்குள் சென்று மீண்டும் அரை மணி நேரம் கழித்து வெளியே வந்து கோவில் திருவிழாவை சேர்ந்து செய்ய அம்மன் உத்தரவு அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள் கே.வி குப்பம் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர் புகாரை விசாரித்த உதவி காவல் ஆய்வாளர் கார்த்தி என்பவர் பெற்றுக் கொண்டு இரு தரப்பினர் இடையே விசாரணை மேற்கொண்டுள்ளார் அந்த விசாரணையின் போது இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்த காவல் ஆய்வாளர் கார்த்தி இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோவில் திருவிழாவை இருவரும் சேர்ந்து நடத்துமாறு கூறியுள்ளார்.
இதனை ஒப்புக்கொண்ட மாற்று சமூகத்தினர் அன்று இரவோடு இரவாக கோவில் கருவறைக்குள் இருந்த அம்மன் சிலையை எடுத்துச் சென்றதாக இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தலித் சமூகத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபடவே அங்கு உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டு VAO ராஜா, வட்டாட்சியர் சந்தோஷ் சிப்பந்தி சின்னதுரை ஆகியோர் வரவழைக்கப்பட்டு தலித் சமூகத்தினர் எவ்வித பிரச்சினைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று கூறி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறவே ஒருவர் ஒருவர் மாற்றி மாற்றி அடித்துக் கொள்ளவே அந்தக் கோவில் இடிக்கப்பட்டு அரசு சார்பாக கமிட்டி அமைத்து அறங்காவல் துறை சார்பாக புதிய கோவில் கட்டித் தருவதாக வாக்குறுதி அளிக்கவே மீண்டும் அந்த கோவில் கருவறைக்குள் அம்மன் சிலையை வைத்து இரு தரப்பினரும் பூஜைகள் நடத்தி வருகின்றனர்.
No comments