ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி 96 ம் ஆண்டு பெருவிழா 9ம் நாள் விழாவில் ஆயர் ஸ்டீபன் அந்தோணி நற்கருணை ஆசீர் வழங்கினார் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு .
திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலம் உள்ளது. இங்கு 96 வது ஆண்டு திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மதியம் மற்றும் மாலையில் திருயாத்திரை திருப்பலி, மறையுறை, நற்கருணை ஆராதனை நடைபெற்று வந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 9 ம் பெருவிழாவான இன்று மாலை நற்கருணை ஆராதனை நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மறை மாவட்ட மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோணி கலந்து கொண்டு சிறப்பு மறையுறை, நற்கருணை ஆசீர் வழங்கினார். அப்போது அன்பு மட்டுமே உண்மையானது. இறைவனுடைய வார்த்தையை மறந்து விடக்கூடாது, இயேசுவின் இதயம் எப்படி இருந்ததோ அதேபோல் நாம் வாழ வேண்டும் என அறிவுறுத்தினார்.
- திருச்செந்தூர் தாலுகா நிருபர் பெ.முகேஷ்
Post Comment
No comments