சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளியின் ஏழாம் ஆண்டு விளையாட்டுப் விழா.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுபம் வித்யா மந்திர் சி பி எஸ் சி பள்ளியின் ஏழாம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது, பள்ளியின் நிறுவனத் தலைவர் கியான் சந்த் ஜெயின் தலைமை வகித்தார். தாளாளர் சுதேஷ் ஜெயின், சுபம் லிட்டில் ஏஞ்சல்ஸ் தாளாளர் ஹர்ஷா சுதேஷ் ஜெயின், ரோட்டரி கிளப் தலைவர் கணேசன், டெம்பில் டவுன் சீர்காழி ரோட்டரி கிளப் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் வித்தியா வரவேற்றார்.
முன்னதாக சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களின் ஒலிம்பிக் தீபச்சுடர் ஓட்டத்தை சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் துவக்கி வைத்து பேசினார்கள். ஒலிம்பிக் தீபச் சுடலை நிறுவனத் தலைவர் கேன்சந்த் ஜெயன், சுதேஷ் ஜெயின், ரோட்டரி கிளப் தலைவர் கணேசன், டெம்பில் டவுன் சீர்காழி ரோட்டரி கிளப் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். மாணவர்களின் பிரமீடு யோகாசனம், மாஸ்டரில் போன்ற சாகசம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 100 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இவ்விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பழனிவேல், வினோத், கந்தசாமி, நடராஜன், ரபீக், சிவசுந்தர விநாயகமூர்த்தி, டெம்பிள் டவுன் ரோட்டரி கிளப் இணைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நல்லாசிரியர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் நிறைவாக பள்ளி ஆசிரியை சுகந்தவள்ளி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள்.
No comments