நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 75 ஆம் ஆண்டு பவள விழா ஆலோசனை கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பில் (1949 - 2024) 75ம் ஆண்டு பவளவிழா ஆலோசனை கூட்டம் பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கரன், தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவரும், மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவரும் (மாவட்ட சேர்மன்) நாட்றம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் என்.கே.ஆர்.சூரியகுமார் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை எடுதுறைத்து சிறப்புரை நிகழ்தினார்.
உடன் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சிபிரதிநிதிகள், இருபால் பள்ளியின் ஆசிரியர்கள் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments