புதுச்சேரியில் 6 பேரிடம் 4.38 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம கும்பலை சைபர்கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் சூர்யா. மர்ம நபரின் வாட்ஸ் அப் குருப்பில் இணைந்துள்ளார். அந்த குருப்பில் மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என நபர் ஒருவர் பேசியதை நம்பி, மர்ம நபர் அனுப்பிய லிங்கின் வழியாக 1.88 லட்சம் ரூபாய் அனுப்பினார். பின் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாமல் அவர் ஏமாந்தார்.
மேலும், வீமன் நகரை சேர்ந்தவர் மீனாட்சி. இவரை தொடர்பு கொண்ட நபர், டெல்லி விமான நிலைத்தில் இருந்து அதிகாரி பேசுவதாகவும், உங்களுக்கு பார்சல் வந்துள்ளது.அதற்கு அனுமதி கட்டணம் செலுத்த வேண்டும் என கூறினார். அதை நம்பி, அவர் 1.75 லட்சம் ரூபாய் அனுப்பி மோசடி கும்பலிடம் அவர் ஏமாந்தார்.
திருக்கனுார் பகுதியை சேர்ந்த திருமுருகன், 21 ஆயிரம், கார்த்திக்ராஜா, 26 ஆயிரம், திப்புராயப்பேட்டை பகுதியை சேர்ந்த பரத், 11 ஆயிரம் ரூபாய் அனுப்பிமோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 6 பேர் நேற்று கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments