தென்காசி பகுதிகளில் CCTV இல்லாத வீடுகளில் கைவரிசை காட்டிய 4 திருடர்கள், வளைத்து பிடித்த காவல்துறை.
தென்காசி பகுதிகளில் ஆளில்லாத மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாத வீடுகளை நோட்டமிட்டு தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்த காவல்துறையினர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூர்,கீழப்பாவூர் பகுதிகளைச் சேர்ந்த கருணாகரன் மற்றும் கோமதிசங்கர் இவர்கள் வெளியூர் சென்றிருந்தத நிலையில் மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ள சென்ற மர்ம நபர்கள், பீரோக்களை உடைத்து இதில் தங்கநகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றிருந்தனர்.
இந்த நிலையில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த கணேசன்(39), தென்காசி மாவட்டம் கீழப்பாவூரை சேர்ந்த சங்கரராமன் (36), தஞ்சாவூரை சேர்ந்த ரமேஷ் (42), கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (50) ஆகிய நால்வரையும் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் மதுரையை சேர்ந்த குற்றவாளி கணேசன் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் இயங்கி வந்த பிரபலமான லலிதா ஜுவல்லரி கடைக்கடையில் முகமூடி அணிந்து சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபர் என்பதும் சமீபத்தில் தான் சிறையிலிருந்து வெளியோ வந்த கணேசன் மீண்டும் திருட்டு கும்பலுக்கு மூளையாக செயல்பட்டார் என்பதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பல் ஆளில்லாத வீடுகள் என்பதோடு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாத வீடுகளாக நோட்டமிட்டு கைவரிசை காட்டியதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 157 - கிராம் தங்க நகைகள் 2.50 லட்சம் பணம், திருட்டிற்கு பயன்படுத்திய இரண்டு கார்கள், ஏழு செல்போன்கள் உட்பட 20 -லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருட்டு கும்பலை கைது செய்த தனிப்படை போலீசார் மற்றும் பாவூர்சத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், துணை காவல் ஆய்வாளர்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பாராட்டியதோடு அவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.
No comments