36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடம் கிடப்பில் போடப்பட்டுள்ளது, அதிகாரிகளின் அலட்சியத்தால் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை வருகின்றனர்.
ஈரோட்டில் சுமார் 36.28 லட்சம் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடம் ஒன்று கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் இருந்து வருகிறது ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் கிருஷ்ணம்பாளையம் சாலையில் மண்டலம் ஒன்றில் தூய்மை இந்தியா இயக்கம் 20-2021-22 சார்பாக 36.28 லட்சம் மதிப்பீட்டில் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் இருந்து வருகிறது.
இந்த கழிப்பிடம் கடந்த 06 மாதங்களுக்கு முன்பே பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது, ஆனால் இதுவரைக்கும் புதிதாக கட்டப்பட்ட இந்த பொதுக்கழிப்பீடம் ஆனது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை, பொதுமக்களின் நலனுக்காக அரசாங்கம் நிதியை ஒதுக்கி பொதுக்கழிப்பிடம் கட்டினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் இதைப்பற்றி கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
உடனடியாக ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் இந்த பொதுக்கழிப்பிடம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments