அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் அனுமதி பெற நவ. 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு - மாவட்ட ஆட்சியர் தகவல்.
தருமபுரி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் மலையிடப் பகுதியில் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை அரசாணை எண்.66, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நாள். 30.03.2020-ல் வரன்முறைப்படுத்த 30.11.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, அரசாணை எண்.132, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நாள். 18.07.2024-ல் உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayouthillareareg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகின்றது. எனவே, இதுவரை மலையிட பகுதியில் வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள இது இறுதி வாய்ப்பாக அமைவதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி, இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments