பேர்ணாம்பட்டில் இன்று அதிகாலை விபத்து. நல்வாய்ப்பாக உயிர் பலி இல்லை.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் 28.8.2024 இன்று அதிகாலை 4 மணி அளவில் பெங்களூரில் இருந்து மணி என்பவருக்கு சொந்தமான KA01 AD 0959 என்ற பதிவு எண் கொண்ட லாரி வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் ஏற்றிக்கொண்டு பேர்ணாம்பட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது மத்தூர் என்ற இடத்தில் சாலை தடுப்பு சுவர் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது இச்சம்பவத்தில் லாரி ஓட்டுநர் கர்ணன் எவ்வித காயம்யின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மேலும் இச்சம்பவிடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துணியினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு லாரியின் டீசல் டேங்க் உடைந்து அதிலிருந்து கசிந்த டீசல் சாலை எங்கும் பரவியது உடனடியாக தீயணைப்புத் துறையினர் தண்ணீர் பீச் அடித்த அப்புறப்படுத்தினர் இதுகுறித்து பேர்ணாம்பட் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments