ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 25வது பட்டமளிப்பு விழா.
ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 25வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு 72 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரி, ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 25வது பட்டமளிப்பு விழா இன்று கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 72 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களையும், தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியருக்கு பதக்கங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்திய அரசு, கால்நடைப் பராமரிப்புத் துறை ஆணையர் டாக்டர் அபிஜித் மித்ரா கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையாற்றினார். முன்னதாக கல்லூரி டீன் செழியன் ஆண்டறிக்கை வாசித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், சாய் J. சரவணன் குமார், சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி மற்றும் தலைமைச் செயலர் சரத் சௌகான், கால்நடைப் பராமரிப்பு அரசு செயலர் ராஜூ, மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், மாணவ மாணவியர் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இக்கல்லூரியில் புதுச்சேரி மட்டுமில்லாமல் கேரளா, மகாராஷ்டிரா, பீகார், உத்திரபிரதேசம், ஹரியானா, நாகாலாந்து, ராஜஸ்தான் போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments