தூத்துக்குடி மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் பணி தொடங்கப்படவுள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
இதற்கு உறுதுணையாக இருந்த கனிமொழி கருணாநிதி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், கே.என்.நேரு, ஆணையர் மதுபாலன் மற்றும் அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாநகரில் முதல்கட்டமாக 7 வார்டுகளில் 24மணி நேரமும் குடிநீர் வழங்கும் பணியை தொடங்கவுள்ளோம். தொடர்ந்து 60 வார்டுகளிலும் அப்பணிகள் விரிவுப்படுத்தப்படும். மாநகராட்சி பகுதிகளில் தேவையில்லாமல் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து கோசாலையில் அடைக்கப்படும். மாநகராட்சி பகுதியில் 3806 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் என்றார். தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் உதவி ஆணையர்கள் சுரேஷ்குமார், கல்யாணசுந்தரம், சொர்ணலதா, நகரஅமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், துணை பொறியாளர் முனீர் அகமது, நகர்நல அலுவலர் வினோத் ராஜா, சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜபாண்டி மற்றும் மண்டலத்தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments