காரைக்கால் கே.எம்.கே மேல்நிலைப் பள்ளியில் 24ஆம் ஆண்டு விளையாட்டு விழா. அமைச்சர் திருமுருகன் போட்டிகளை தொடங்கிவைத்தார்.
காரைக்கால் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைக்துள்ள கே.எம்.கே மேல்நிலைப் பள்ளியில் 24ஆம் ஆண்டு விளையாட்டு விழா, இன்று தொடங்கியது. தொடக்க நிகழ்வாக வலத்தெருவிலிருந்து ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது.
ஒலிம்பிக் ஜோதியானது மாநில அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களால் கொண்டு வரப்பட்டு, புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன் பள்ளியில் ஏற்றினார். தாளாளர்கள் மணிமேகலை கண்னையன், மதுகண்னையன் ஆகியோர் தேசியக்கொடி பள்ளியின் கொடியை ஏற்றினர். அதனை தொடர்ந்து நாடைபெற்ற பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் ஏற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் திருமுருகன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
No comments