சரக்கு வாகனங்களில் பொது மக்களை ஏற்றி சென்ற வாகனங்கள் : ஒரே நாளில் 215 வழக்குகள்.
சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிச் செல்லும் விதிமுறைகளை மீறிய வழக்கில் நேற்று ஒரே நாளில் 215 வழக்குகள் நான்கு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நெல்லை சரக டிஐஜி மூர்த்தி தகவல்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 21 வழக்குகளும், தென்காசியில் அதிகபட்சமாக 85 வழக்குகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 55 வழக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 54 வழக்குகளும் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நெல்லை சரக டிஐஜி டாக்டர் மூர்த்தி தகவல்
பொதுமக்கள் சரக்கு வாகனங்களில் பயணம் மேற்கொள்வதை அடியோடு தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள அவர் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments