Breaking News

ஆம்பூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது.


திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான இந்திரா நகர், மாங்காய்தோப்பு,  மாதனூர், மற்றும் வெள்ளக்கல் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் கொள்ளைச்சம்பவம் நடைப்பெற்ற நிலையில், ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுப்பட்ட நபர்களை பிடிக்க திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அவர்கள் உத்தரவிட்டதின் பேரில், ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர், தொடர் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், தனிப்படை காவல்துறையினர் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பதிவு எண் இல்லாமல் வந்த நபர்களை நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியை சேர்ந்த தினகரன் மற்றும், மணிவண்ணன் என்பதும், இருவரும் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது.


உடனடியாக அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களை ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம்  மேலும் விசாரணை மேற்க்கொண்டு, அவர்கள் கொள்ளையடித்துச்சென்ற நகை மற்றும் பணத்தில் வாங்கிய 22  லட்சம் மதிப்பிலான இரண்டு ஈச்சர் லாரிகளையும், கொள்ளைச் சம்பவங்களுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களையும்  காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


அதனை தொடர்ந்து இருவர் மீதும் வழக்குபதிவு செய்து இருவரையும் ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

No comments

Copying is disabled on this page!