Breaking News

புதுச்சேரியில் இரண்டு பேரிடம் 1.99 லட்சம் மோசடி செய்த மர்ம கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.


புதுச்சேரியில் இரண்டு பேரிடம் 1.99 லட்சம் மோசடி செய்த மர்ம கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர். அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ஹேமா. இவர் சுய தொழில் செய்வதற்காக பல மாதங்களாக ஆன்லைனில் மிஷின் தேடினார். இவரது இன்ஸ்ராகிராம் மூலம் பேக்கிங் மிஷின் இருப்பதாக தகவல் வந்தது. அதையடுத்து, அந்த நபரை தொடர்பு கொண்டு, அந்த மிஷினை வாங்குவதற்கு அவர் 1.73 லட்சம் ரூபாயை அனுப்பி ஆர்டர் செய்தார்.



இந்நிலையில், ஆர்டர் செய்த மிஷினிற்கு பதிலாக அந்த நபர் வேறு ஒரு போலியான மிஷினை அனுப்பி வைத்தார். மேலும், புதுச்சேரி நாதன்பேட்டை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு மொபைனில் ஒருவர் தொடர்பு கொண்டு குறைந்த வட்டிக்கு தனியார் நிதி நிறுவனம் மூலம் 1 லட்சம் ரூபாய் கடன் அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கட்டணம் கட்ட வேண்டும் என அந்த நபர் கூறினார். அதை நம்பி, அவர் 26 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.


இதுகுறித்து, இரண்டு பேர் நேற்று கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.


- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி

No comments

Copying is disabled on this page!