Breaking News

புதுச்சேரியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை.


புதுச்சேரியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


புதுச்சேரி வில்லியனூர் மூர்த்தி நகரை சேர்ந்தவர் அய்யனார்(52).கூலி தொழிலாளியான இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமியின் பெற்றோர் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ்  அய்யனாரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.


இந்த வழக்கு புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில் இன்று இறுதி விசாரணை நடந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட அய்யனாருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க புதுவை அரசுக்கு உத்தரவிட்டார்.இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக பச்சையப்பன் ஆஜரானார்.


- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி

No comments

Copying is disabled on this page!