Breaking News

தேனி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்க்கு ஆட்கள் தேர்வு முகாம் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடக்கிறது.


மதுரை திண்டுக்கல் தேனி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான 108 அவசர ஊர்திக்கு ஆள் சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 30ஆம்  தேதி, தேனி அரசு மருத்துவமனையில் நடைபெற இருக்கிறது.

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் செயல்படுகிறது இதில் பணிபுரிய மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி தேனி அரசு மருத்துவமனையில் நடைபெற இருக்கிறது.


மருத்துவ உதவியாளருக்கு உண்டான தகுதிகள் பின்வருமாறு BSc Nursing, GNM, ANM , DMLT (பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது life science BSc Zoology , Botany, Bio- Chemistry ,Micro biology ,Bio technology இதில் ஏதோ ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும் மாதம் ஊதியம் ரூபாய்16,080(மொத்த ஊதியம்) நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும் தேர்வு முறையானது 1. எழுத்துத் தேர்வு 2. மருத்துவ நேர்முகம் உடற்கூறியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை 3. மனிதவளத்துறையின் நேர்முகத் தேர்வு. இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும் பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.


ஓட்டுநருக்கான தொகுதிகள் பின்வருமாறு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயது 24 மேலும் 35 க்கு மிகாமலும் இருக்க வேண்டும் மாத ஊதியம் ரூபாய் 15,820 மொத்த ஊதியம் உயரம் 162.5 சென்டிமீட்டர் குறையாமல் இருக்க வேண்டும் இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பேட்ச் உரிமம் பெற்று இருக்க வேண்டும் மிளகு ரக வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேட்ச் எடுத்து ஒரு ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு முறை
  1. எழுத்துத் தேர்வு
  2. தொழில்நுட்ப தேர்வ
  3. மனிதவளத்துறையின் நேர்காணல்
  4. சாலை விதிகளுக்கான தேர்வு
  5. கண்பார்வை மற்றும் மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு
தேர்வு செய்யப்பட்டவர்கள் 10 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும் பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும் மேலும் விவரங்களுக்கு 044 28888060 எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு இவ்வரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments

Copying is disabled on this page!